
posted 31st May 2022
சிறுமி ஆயிஷா படுகொலைக்கு நீதி கோரும் கவனவீர்ப்பு போராட்டம்
அட்டுலுகமை சிறுமி ஆயிஷா படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலும் கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் ஊடக அமையத்துக்கு 5 இலட்சம் ரூபா நிதி உதவி
யாழ் ஊடக அமையத்துக்கு 5 இலட்சம் ரூபா நிதி உதவி. கனடா மற்றும் இலங்கைக்கான வர்த்தக இணைப்பாளர் குலா செல்லத்துரை அவர்களின் பங்களிப்புடன் யாழ் (ஊடக அமையத்திற்கு) ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் இலங்கை வந்திருந்த குலா செலுத்துரை குடும்பத்தினர் COVID 19 தீவிர நோய்ப் பரவலின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ உதவிகளை வழங்கி இருந்தனர்.
இதன்போது யாழ் ஊடக அமையத்தில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பிரபல தொழிலதிபர் குலா செல்லத்துரை அவர்களினால் , ஊடகவியலாளர்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காகவும், நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு நடவடிக்கைக்காகவும் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குலா செல்லத்துரை அவர்கள் CMG குழுமத்தின் வர்த்தக பங்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அரியாலை - நாவலடியில் இடம்பெற்றது. இதில், அதே இடத்தைச் சேர்ந்த ம. அரவிந்தன் (வயது- 28 ) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து அங்கு கூடிய கிராம மக்கள் தொடருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்று திங்கட்கிழமை (30) திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.
குறித்த தீ விபத்து காரணமாக ஓட்டோ பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு அரசாங்கம் செய்த நிவாரணத்தில் பகிர்வதில் ஊழல்
இந்தியா தமிழ்நாட்டு அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய நிவாரணப் பொதிகளை பகிர்ந்தளிப்பதில் வன்னி மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதில், தமிழக அரசு வழங்கிய நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறியளவு பொதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது கண்டிக்கத்தக்கது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம், மீன்பிடித் தொழில்களைக் கொண்ட மாவட்டம், உரத் தட்டுப்பாட்டினாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியிலான நெருக்குவாரங்களைச் சந்திக்கும் எமது மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வழமையான புறக்கணிபபை இந்த அரசாங்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் அதிக பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் அங்கவீனமுற்றவர்களையும் கொண்ட எமது மாவட்டங்களுக்கு உடனடியாக அதிக நிவாரணப் பொதிகளை அவதியுறும் மக்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க இந்திய அரசும் தமிழக முதல்வரும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம், என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY